Latestமலேசியா

சிறார்கள் பராமரிப்பில் அலட்சியம் 3 ஆசிரியைகள், பராமரிப்பு உதவியாளர் மீது குற்றச்சாட்டு

அலோர் காஜா, ஜூன் 10 – மழலையர் பள்ளியைச் சேர்ந்த இரண்டு  குழந்தைகளை  பராமரிக்கும் விவகாரத்தில்  அலட்சியமாக அல்லது பொறுப்பு உணர்வுடன் நடந்துகொள்ளத் தவறியதாக  மழலையர் பராமரிப்பு நிலையத்தின் மூன்று ஆசிரியைகள்  மற்றும் பராமரிப்பு உதவியாளர் மீது  தனித் தனியாக குற்றஞ்சாட்டப்பட்டது.   

 41  வயது  ஜமியா அப்துல் ரஹ்மான் (Jamia Abd Rahman),  24 வயதுடைய நோர்  ஹனிஸ்  அஸ்வானி கஷாலி (Nur Hanis Azwani Ghazali),  33 வயதுடைய    ஹப்ஷா அப்துல் ரசாக் (Hafsah Ab Razak) ஆகிய  ஆசிரியைகளும்    மழலையர் பள்ளியின் உதவியாளர்  நுர் டியானா   ஜைனுடின் (Nur Diyana Zainuddin) ஆகியோர் மீது  மலாக்கா செஷன்ஸ் நீதிமன்றத்தில் தனித்தனியாக இன்று  குற்றஞ்சாட்டப்பட்டது. 

அந்த நால்வரும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர்.  உடல் மற்றும் மனோநிலை பாதிக்கும் வகையில்  4வயது மற்றும்  ஆறு வயது சிறார்களை  பாதுகாப்பதில் அந்த நால்வரும் அலட்சியத்துடன் செயல்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். 

Tanjung   Minyak ,  Tamam Cheng Indah  வில்  உள்ள Bonda  மழலையர் பள்ளியில்  கடந்த  மார்ச் மாதம்  முதல் மே மாதம் வரை அவர்கள் இக்குற்றத்தை புரிந்ததாக  நீதிபதி    Rohatul Akmar Abdulah  மற்றும் நீதிபதி  Azararoni Abdul  Rahmaad முன்னிலையில்  குற்றஞ்சாட்டப்பட்டனர்.  அந்த நான்கு பெண்களும்   ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டு அடுத்த மாதம்  24 மற்றும் 30ஆம் தேதியில்   மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!