Latestமலேசியா

சிலாங்கூரில் சட்டவிரோத கெராங் குஞ்சுகள் பறிமுதல்

ஷா ஆலாம், மே-21-சிலாங்கூர் மீன்வளத் துறை (DOF), சபாக் பெர்னாம் மற்றும் கோலா சிலாங்கூர் பகுதிகளில் மேற்கொண்ட இரு தனி சோதனைகளில் சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்ட கெராங் (kerang) குஞ்சுகளை பறிமுதல் செய்தது.

சுங்கை ஹாஜி டோரானி (Sungai Haji Dorani) பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில், 13 மூட்டைகளில் நான்கு மில்லிமீட்டருக்கு குறைவான அளவிலான கெராங் குஞ்சுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதற்கு யாரும் உரிமை கோரவில்லை.

அதே நாளில், பாசிர் பெனம்பாங் (Pasir Penambang) ஜெட்டியில் நடந்த மற்றொரு நடவடிக்கையில், அதிகாரிகள் வருவதை கண்டு தப்பியோடிய குழுவினர் விட்டுச்சென்ற 930 ரிங்கிட் மதிப்பிலான 31 வலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த இரு சம்பவங்களுக்கும் மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!