Latestமலேசியா

சுட்டெரிக்கும் வெயிலில் மாணவனை 3 மணி நேரம் நிற்க வைத்த விவகாரம் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும் – பட்லினா சிடேக்

கோலாலம்பூர், மே 31 – 5 ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை  சுமார்  மூன்று மணி நேரம் சுட்டெரிக்கும் வெயிலில்  நிற்க வைத்ததோடு  அம்மாணவன் வெப்ப அலை பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுவது குறித்து கல்வி அமைச்சு நடவடிகை எடுக்கும். இந்த விவகாரத்தில்  தவறு நடந்து   மாணவரின்   உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தால்  இணக்கப் போக்கு என்ற  பேச்சுக்கே இடமில்லையென  கல்வி அமைச்சர்   Fadhlina Sidek தெரிவித்தார்.  

இந்த விவகாரத்தை  நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்பதோடு இது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக   அவர் கூறினார்.  அதிகாரிகளின்  விசாரணை  அறிக்கையின் அடிப்படையில்    பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  Fadhlina  தெரிவித்தார். 

மாணவர்கள்,  ஆசிரியர் மற்றும்  ஒட்டு மொத்த பள்ளி சமூகத்தின்  பாதுகாப்பு  மற்றும் சுபிட்சத்தை  பாதிக்கும்  எந்தவொரு தவறான நடவடிக்கை விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும்   என்ற பேச்சுக்கே  இடமில்லையென  அவர் தெரிவித்தார்.  எனவே  மாணவர்களை நிர்வகிக்கும் விவகாரத்தில் அவர்களுக்கான வழிகாட்டியை எப்போதும்  பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டும் என்றும்   Fadhlina ஆலோசனை தெரிவித்தார்.  

11 வயதுடைய தனது மகனை  மூன்று மணி நேரம்  ஆசிரியர் நிற்க வைத்ததால்  அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் இப்போது  அம்பாங் மருத்துவமனை  தமது மகனை  மாற்று திறனாளி என  குறிப்பிட்ட  கடிதம் வழங்கியிருப்பதாக அவனது   தாயார்  மோகன செல்வி   கூறியிருந்தார். 

தனது மகனுக்கு வெப்பநிலை பக்கவாதம் ஏற்பட்டுள்ளதால் நரம்பு மண்டலப் பிரச்னை ஏற்பட்டுள்ளதோடு  35 வயதுடைய மோகன செல்வி புதன்கிழமையன்று கூறியிருந்தார்.   சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியருக்கு எதிராகவும்   மாணவனின் தாயார் புகார் செய்திருப்பதை அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர்  துணை கமிஷனர்  Mohd Azam Ismail  உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!