Latestமலேசியா

சூட்கேசில் 5 லட்சம் ரிங்கிட் ரொக்கம் கண்டெடுப்பு; சொந்தம் கொண்டாடுகிறது ஷா ஆலாம் நிறுவனம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச்-22, டாமான்சாராவில் பேரங்காடியொன்றின் பாதுகாவலர்களால் கண்டெடுக்கப்பட்ட சூட்கேசில் இருந்த 5 லட்சம் ரிங்கிட் ரொக்கத்திற்கு, ஷா ஆலாமைச் சேர்ந்த நிறுவனமொன்று சொந்தம் கொண்டாடுகிறது.

சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் ஹுசேய்ன் ஓமார் கான் அதனைத் தெரிவித்துள்ளார்.

அப்பணம் உண்மையிலேயே அந்நிறுவனத்திற்குத் தான் சொந்தமானதா என்பதை உறுதிச் செய்ய விசாரணைகள் நடைப்பெற்று வருவதாக அவர் சொன்னார்.

கார் நிறுத்துமிடத்தில் இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் நடுத்தர அளவிலான சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறி, பேரங்காடியின் பாதுகாலவர்கள் முன்னதாக போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து, சூட்கேசை திறந்து பரிசோதித்ததில், 10 ரிங்கிட், 50 ரிங்கிட், 100 ரிங்கிட் நோட்டுக் கட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

அவை அனைத்தும் உண்மையான பண நோட்டுகள் என்றும், அவற்றின் மொத்த மதிப்பு 5 லட்சம் ரிங்கிட்டைத் தாண்டலாம் என்றும் நம்பப்படுகிறது.

சம்பந்தப்பட்ட பேரங்காடியில் CCTV கேமரா பதிவுகளைப் பார்வையிட்டதில், அந்த பண சூட்கேஸ் கண்டெடுக்கப்பட்ட இடம் அதில் இடம்பெறவில்லை என்றும் ஹுசேய்ன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!