செகாமாட், ஏப்ரல் 20 – ஜொகூர், செகாமாட் தாமான் யாயாசானில் நேற்று கனமழையுடன் புயல் காற்று வீசியதில், பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்து 5 வாகனங்கள் சேதமுற்றன.
Billion பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் மாலை 6.21 மணி வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு Honda CRV உள்ளிட்ட அக்கார்கள் மீது சுமார் 13 மீட்டர் உயரம் கொண்ட மரம் சாய்ந்துக் கிடப்பது வைரலாகியுள்ள காணொலிகளில் தெரிகிறது.
எனினும் அதில் யருக்கும் காயம் ஏற்படவில்லை என தீயணைப்பு மீட்புத் துறை உறுதிப்படுத்தியது.
சாய்ந்து விழுந்த மரத்தை வெட்டி, ஒருவழியாக அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயணைப்புத் துறை பாதையைத் திறந்து விட்டது.