Latestமலேசியா

செராஸ் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த ஆண் உயிரிழப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 2 – கோலாலம்பூர், பத்து 9 செராஸ், தாமான் புக்கிட் செகராவிலுள்ள (Batu 9 Cheras, Taman Bukit Segar) அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை 3.46 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், அந்த ஆண் தரையில் முகம் கீழாக விழுந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததாக காவல்துறை தெரிவித்தது.

அவரது உடலில் குற்றச் செயல் நடந்ததற்கான காயங்கள் எதுவும் காணப்படவில்லை. மேலும் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதென்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மரணத்திற்கான காரணம் குறித்து காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!