
கோலாலம்பூர், ஜூலை-11-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான போலி ஜெர்சிகளை விற்பனை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் கடைகளின் மீது உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN அதிரடிச் சோதனை நடத்தியது.
சுமார் RM270,150 மதிப்பிலான 5,403 போலி ஜெர்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தச் சோதனையில் வங்காளதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த 6 வெளிநாட்டுப் பணியாளர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
இந்தக் கடைகளில் ஜெர்சிகளில் பெயர் மற்றும் எண்களை அச்சிடுவதற்கான பிரத்யேக இயந்திரங்கள் இருந்தன.
உள்ளூர் மக்களுக்கு ஒரு ஜெர்சி சுமார் RM50-க்கு விற்கப்பட்டது; ஆனால், சுற்றுப் பயணிகளிடம் ஒரு ஜெர்சிக்கு RM100-க்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.
2019 வர்த்தக முத்திரைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்தக் கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களை KPDN அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
பொது மக்கள் இதுபோன்ற போலிப் பொருட்களை விற்பனை செய்வது குறித்து தெரிந்தால், உடனடியாக KPDN அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



