Latestமலேசியா

ஜெலுத்தோங்கில் பூனை சாக்குப் பையில் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம்; சந்தேக நபர் ஒருவழியாகக் கைது

ஜெலுத்தோங், ஜூன்-3, பினாங்கு, ஜெலுத்தோங்கில் பூனை சாக்குப் பையில் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, ஓர் ஆடவர் கைதாகியுள்ளார்.

பொது மக்கள் கொடுத்த தகவலை அடுத்து போலீஸ் வேவுப் பார்த்ததில், 40 வயது மதிக்கத்தக்க அந்நபர், வெள்ளிக் கிழமையன்று கைதானார்.

விலங்குகள் நலச் சட்டத்தின் 29-வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை, தீமோர் லாவோட் போலீஸ் தலைவர் Raslan Ab Hamid உறுதிபடுத்தினார்.

பொது மக்களில் சிலர், கட்டப்பட்ட சாக்குப் பையொன்றை ஆற்றில் இருந்து வெளியே எடுப்பதும், அவிழ்த்துப் பார்த்தால் அதனுள் பூனை செத்துப் போய் கிடப்பதும், முன்னதாக வைரலான வீடியோவில் தெரிந்தது.

அப்படி அங்கு நடப்பது இது முதன் முறையல்ல; ஏற்கனவே சில தடவை அது போன்று பூனைகள் சாக்குப் பைகளில் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதாகக் தங்களுக்குப் புகார் கிடைத்ததாக மலேசிய விலங்குகள் நலச் சங்கம் கூறியிருந்தது.

முந்தையச் சம்பவங்களை நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை; ஆனால் ஆகக் கடைசி சம்பவத்தை நேரில் பார்த்தவர் இருப்பதால், இம்முறை சந்தேக நபர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என அச்சங்கத்தின் தலைவர் Arie Dwi Andika வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!