Latestமலேசியா

ஜோகூர் பாருவில் களைகட்டிய ‘Colours of India’ தீபாவளி எக்ஸ்போ; அடுத்து பேராக், சிலாங்கூரில் கோலாகலம்!

ஜொகூர் பாரு, அக்டோபர் 12 – தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ‘கலர்ஸ் ஆஃப் இந்தியா’ (Colours of India) தனது இந்த ஆண்டின் முதல் தீபாவளி எக்ஸ்போவை ஜொகூர் பாரு, சுதிரா மாலில் அக்டோபர் 7 முதல் 11ஆம் தேதி வரை நடத்தியது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த எக்ஸ்போவின் நிறைவு விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் கலந்துகொண்டு, இந்திய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு இத்தகைய வணிகக் கண்காட்சிகள் முக்கியமான வாய்ப்புகளை வழங்குவதாகப் பாராட்டினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக ‘கலர்ஸ் ஆஃப் இந்தியா’ பல சிறு வணிகர்களின் முன்னேற்றத்திற்குத் துணைநின்று வருவதாகவும், உள்நாட்டு இந்திய வர்த்தகர்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, தீபாவளிக்கான ஆடைகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள், பல்வேறு உணவு வகைகள் என ஏராளமான விற்பனை அரங்குகள் எக்ஸ்போவை வண்ணமயமாக்கின.

இசை, நடனம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தின. குறிப்பாக, வணக்கம் மலேசியாவின் ‘ஒற்றுமை ஒளிரும் தீபாவளி’ கொண்டாட்டமும் இந்த எக்ஸ்போவுக்குக் கூடுதல் சிறப்புச் சேர்த்தது.

ஜொகூர் பாருவில் வெற்றிகரமாக நிறைவடைந்த இந்த எக்ஸ்போ, அடுத்ததாக பேராக் மற்றும் சிலாங்கூரிலும் நடைபெறவுள்ளது.

பேராக் அனைத்துலக தீபாவளி எக்ஸ்போ, அக்டோபர் 14 முதல் 18ஆம் தேதி வரை, தைப்பிங் Dewan St. Louis (DSL) மண்டபத்தில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து, சிலாங்கூர் குளோபல் மெகா தீபாவளி எக்ஸ்போ, அக்டோபர் 28 முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை, கிள்ளான் AEON Mall Bukit Raja-வில் நடைபெறவுள்ளது.

தீபாவளி ஷாப்பிங், சுவையான உணவு வகைகள், இசை, நடனம் எனப் பண்டிகையின் வண்ணங்களைக் கொண்டாட, அடுத்த ‘கலர்ஸ் ஆஃப் இந்தியா’ எக்ஸ்போவுக்குக் குடும்பத்துடன் வருகை தந்து மகிழலாம்!

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!