
லாஹூர், நவம்பர்-14 – பாகிஸ்தான், லாஹுரில் டிக் டோக் வீடியோ எடுப்பதற்காக நடத்தப்பட்ட ஆபத்தான சாகசம் ஒன்றில், 19 வயது இளைஞர் ஒருவர் புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அவ்விளைஞர் ஒரு பண்ணை வீட்டு ஊழியராவார்.
பாகிஸ்தானின் பிரபல சமூக வலைத்தள உள்ளடக்க உருவாக்குநர் Nouman Hassan வீடியோ எடுப்பதற்காக அந்தப் பண்ணைக்குச் சென்றபோது, கூண்டிலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட பெண் புலி திடீரெனக் கட்டுப்பாட்டை மீறி அவ்விளைஞரைத் தாக்கியுள்ளது.
மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற பண்ணை உரிமையாளர் மற்றும் அந்த டிக் டோக் பிரபலம் ஆகிய இருவரையும் லாஹூர் போலீஸ் கைதுச் செய்துள்ளது.
புலியும் வன இலாகா கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
பொழுதுபோக்குக்காக மனித உயிர்களை ஆபத்தில் ஆழ்த்த யாருக்கும் உரிமையில்லை என போலீஸ் எச்சரித்துள்ளது.



