Latestமலேசியா

டீசல் விலை இன்று முதல் 85 காசு குறைவு

புத்ராஜெயா, ஏப்ரல்-23-இன்று முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான புதிய விலைப்பட்டியலின்படி, தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 85 காசு குறைந்து, 5 ரிங்கிட் 12 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

​அதேபோல், மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலை 15 காசு குறைந்து 3 ரிங்கிட் 87 சென்னாகவும், RON97 பெட்ரோல் விலை 25 காசு குறைந்து 4 ரிங்கிட் 85 சென்னாகவும் விற்பனை செய்யப்படும்.

என்றாலும், இலக்கிடப்பட்ட மானியத் திட்டயான BUDI95 திட்டத்தின் கீழ், RON95 பெட்ரோல் விலை மாற்றமின்றி 1 ரிங்கிட் 99 சென் எனத் தொடருவதாக, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

உலகளாவிய சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அது கூறிற்று.

இவ்வேளையில், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசல் விலை 2 ரிங்கிட் 15 சென்னாக நீடிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!