Latestமலேசியா

தேசிய மருத்துவர்கள் தினம்: 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு – மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம்

சுங்கைப்பட்டாணி, அக்டோபர்-11 – தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கெடா, சுங்கைப் பட்டாணியில் நடைபெற்ற Fun Run ஓட்டத்தில் 1,400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.

மலேசிய மருத்துவச் சங்கம், AIMST பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று ஏற்பாடு செய்த இந்நிகழ்வில், மருத்துவர்கள், மாணவர்கள், குடும்பத்தினர் மற்றும் பொது மக்கள் எனப் பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

மருத்துவர்கள் தின Fun Run ஓட்டத்தில் அதிகமானோர் பங்கேற்ற நிகழ்வாக இது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

காலை 7 மணிக்கு zumba உடற்பயிற்சியுடன் தொடங்கிய கொண்டாட்டம், பின்னர் Fun Run ஓட்டத்துடன் களைக் கட்டியது.

சிறுவர்கள் முதல் 70 வயதைக் கடந்த முதியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இதனிடையே, நிகழ்வில் நடைபெற்ற சுகாதாரக் கண்காட்சியில் பொது மக்களுக்கு இலவச உடல்நலப் பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுத் தலைவரும், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மருத்துவப் புலத்தின் தலைவரும், மலேசிய மருத்துவச் சங்கத்தின் கெடா மாநிலப் பிரிவின் முன்னாள் தலைவருமான பேராசிரியர் Dr தியாகர் நடராஜா, தேசிய மருத்துவர்கள் தினத்தில் சமூகத்தினரைப் பங்கேற்கச் செய்வதில் மக்களிடையே இருந்த ஆர்வத்தைப் பங்கேற்பாளர்களின் வருகை வெளிப்படுத்தியதாக கூறினார்.

மருத்துவர்களின் சேவையை அங்கீகரிப்பதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைமுறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!