Latestஇந்தியா

நடிகர் டேனியல் பாலாஜி, வயது 48, மாரடைப்பு காரணமாக காலமானார்

சென்னை, மார்ச் 30 – தென்னிந்திய திரையுலகில் தமது வித்தியாசமான வில்லன் நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவரான வில்லன் நடிகர் டேனியல் பாலஜி மாரடைப்பின் காரணமாக காலமானார்.

சித்தி நாடாகத்தில் நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி நடிகர் ஸ்ரீகாந்தின் ஏப்ரல் மாதம் திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் கால் பதித்தார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு , பொல்லாதவன், பைரவா, பிகில் போன்ற படங்களில் வில்லன் பாத்திரங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கன்னடம் , தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கட்டிப்பட்டிருந்த 48 வயதுடைய டேனியல் பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!