Latestஉலகம்

நடுவானில் மீண்டுமொரு காற்றுக் கொந்தளிப்பு சம்பவம் ; அயர்லாந்து செல்லும் வழியில் 12 பேர் காயம்

டப்லின், மே-27, டோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்லின் புறப்பட்ட Qatar Airways விமானம் நடுவானில் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிக் கடுமையாகக் குலுங்கியதில் 12 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் அறுவர் பயணிகள், அறுவர் விமானப் பணியாளர்கள் ஆவர்.

துருக்கியே நாட்டின் வான் வெளியில் பறக்கும் போது விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது.

எனினும் அட்டவணையிடப்பட்டது போன்றே ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்குள்ளாக அவ்விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை, டப்லின் விமான நிலையம் உறுதிபடுத்தியது.

தரையிறங்கியக் கையோடு, விமான நிலைய போலீஸ், தீயணைப்பு மீட்புத் துறை, மருத்துவக் குழு ஆகியவை வரவழைக்கப்பட்டு காயமடைந்தப் பயணிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டன.

நடுவானில் விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்குவது ஒரே வாரத்தில் இது இரண்டாவது சம்பவமாகும்.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் வந்துக் கொண்டிருந்த Singapore Airlines விமானம் கடுமையானக் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதில், பிரிட்டன் பயணி ஒருவர் உயிரிழந்த வேளை மலேசியர்கள் உள்ளிட்ட ஏராளமான பயணிகள் காயமடைந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!