Latestஉலகம்

நிலநடுக்கம்; ஜப்பானில் உள்ள மலேசியர்களுக்கு எச்சரிக்கை

தோக்யோ, ஜூலை-29-தென் ஜப்பானின் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​குமாமோட்டோவில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றின் இரண்டாம் தளம் இடிந்து விழுந்ததில், கட்டடத்திற்குள் பலர் சிக்கியுள்ளனர்.

அங்கு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றி மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

​இதனிடையே, தோக்யோவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் மூலம் அங்குள்ள நிலைமையை மலேசிய வெளியுறவு அமைச்சான Wisma Putra உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

​தற்போதைய நிலவரப்படி, இந்த இயற்கை பேரிடரில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை.

என்றபோதிலும், கியூஷு (Kyushu) பகுதியில் உள்ள மலேசியர்கள் அனைவரும் எச்சரிக்கையுடனும், உள்ளூர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​ஜப்பானில் அவசர உதவி தேவைப்படும் மலேசியர்கள் தோக்யோவில் உள்ள மலேசியத் தூதரகத்தை உடனடியாகத் தொடர்புக் கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!