Latestமலேசியா

நோன்பு பெருநாள் உட்பட நாட்டின் பிரதான அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கொள்கையை அரசாங்கம் தொடரும்

கோலாலம்பூர், மார்ச் 28 – அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்பு பெருநாள் உட்பட இவ்வாண்டு முழுவதிலும் நாட்டில் கொண்டாடப்படும் அனைத்து பெருநாட்களிலும் இலவச டோல் கட்டண கொள்கையை அரசாங்கம் தொடரவிருப்பதாக பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ Alexander Nanta Linggi தெரிவித்திருக்கிறார். சொந்த வாகனங்களான அதாவது முதல் பிரிவு வாகனங்களுக்கு இவ்வாண்டு முதல் இலவச டோல் கட்டண சலுகை அமல்படுத்தப்பட்டதாக அவர் கூறினார். வர்த்தக வாகனங்கள் உட்பட இதர வாகனங்களுக்கு டோல் கட்டணம் விலக்கு அளிக்கப்படவில்லையென நாடாளுமன்றத்தில் பக்காத்தான் ஹரப்பான் Rasah நாடாளுமன்ற உறுப்பினர் Cha Kee Chin எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது Alexander Nantha தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இலவச டோல் கட்டண செலவுக்காக 206.19 மில்லியன் ரிங்கிட் இழப்பீடை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். அவற்றில் சீன புத்தாண்டு தின கொண்டாட்டத்தின்போது 41.21 மில்லியன் ரிங்கிட்டும் , நோன்பு பெருநாளின்போது 80.07 மில்லியன் ரிங்கிட்டும் , தீபாவளியின்போது 42.31 மில்லியன் ரிங்கிட் மற்றும் Krismas தினத்தின்போது 42.60 மில்லியன் ரிங்கிட்டும் இதில் அடங்கும். பெருநாள் கொண்டாட்டத்தை தங்களது நேசத்திற்குரிய குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாடச் செல்லும் பல இனங்களையும் சேர்ந்த மலேசியர்களின் சுமையை குறைக்கும் நோக்கத்தில் இலவச டோல் கட்டணம் பெருநாள் காலத்தில் அமல்படுத்தப்பட்டதாக Alexander Nantha தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!