Latestமலேசியா

பத்துமலையில் இஸ்லாமிய வசனத்தை வாசித்த சுற்றுப் பயணியை அமைச்சர் சாடினார்

கோலாலம்பூர், மே 25 –  பத்துமலை திருத்தலத்தில் இந்து ஆலய வளாகத்தில் திருக்குர்ஆன் வசனத்தை ஓதிய வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரின் செயலை சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் Mohd Nai’m Mokhtar கண்டனம் தெரிவித்துள்ளார். மலேசியாவின் பன்முக கலாச்சார சமூகம், மற்றும் சமய தலங்களின் புனிதம் குறித்த புரிதல் அந்த நபருக்கு இல்லை என்பதோடு காணொளியில் சிக்கிய சுற்றுலா பயணிகளின் செயல் மிகவும் பொருத்தமற்றது மற்றும் அவமரியாதையானது என்று Na’im கருதுகிறார்.

முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலத்தில் திருக்குர்ஆனின் (Surah Al-Anbiya’ ) வசனங்கள் ஓதிய நபரின் செயல்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மலேசியாவின் சமய நல்லிணக்கம் மற்றும் உண்மை நிலைமையை அவர் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை என்று Na’im இணையத்தள பதிவேடு ஒன்றிடும் தெரிவித்தார். இவ்வாறான செயல்கள் நாட்டில் பல்வேறு சமயங்களின் அமைதியான நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைச்சர் எச்சரித்துள்ளார். பத்துமலையில் முருகன் சிலைக்கு முன் இஸ்லாமிய வசனத்தை வாசிக்கும் காணொளியை அந்த சுற்றுப்பயணி தனது டிக்டாக் @abdeentube கணக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!