Latestமலேசியா

பல்லினக் கலாச்சார அம்சங்களுடன் ஊடகங்களுக்கு விருந்து வைத்து கௌரவித்த சுற்றுலா அமைச்சு

கோலாலம்பூர், மார்ச் 9 -சுற்றுலாத் துறை அமைச்சு MOTAC, ஊடக நண்பர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்க நடத்திய விருந்து நிகழ்வில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.

விருந்துக்கு சுற்றுலா அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் தலைமையேற்றார்.

பல்லின மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் விருந்தில் களைக் கட்டின; குறிப்பாக, சிங்க நடனத்துடன் நிகழ்வு தொடங்கியதும், Voices of Malaysia இசைப் படைப்பையும் சொல்லலாம்.

அதே சமயம், விருந்திலும் பல்லின மக்களின் உணவுகள் பரிமாறப்பட்டன.

மீ கோலோக், லக்சா ஞோஞா, பசெம்பூர் ( ரோஜாக்) உள்ளிட்ட மலேசியப் பாரம்பரிய உணவுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

UNESCO-வின் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க மலேசியா பரிந்துரைத்துள்ள காலைப் பசியாறை உணவுளும் அவற்றில் அடங்கும்.

சரவாக் லக்சா, சாத்தே, செண்டோல், உள்ளூர் பழ வகைகளும் பரிமாறப்பட்டன.

கடந்தாண்டு நெடுகிலும் அமைச்சின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்காக ஊடகங்களுக்கு நன்றித் தெரிவிக்கும் அதே வேளை, இவ்வாண்டுக்கான திட்டங்கள் குறித்து தெரியப்படுத்தவும் அவ்விருந்து நிகழ்வு பயன்பட்டது.

இவ்வேளையில் நேற்றைய நாள் அனைத்துலக மகளிர் தினம் என்பதால், வந்திருந்த அனைத்துப் பெண்களுக்கும் பூங்கொத்து வழங்கப்பட்டது.

பெண்களைப் போற்றும் அடையாளமாக ஒவ்வொரு மேசையாகச் சென்று அமைச்சரே பூங்கொத்தை எடுத்து வழங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!