Latestமலேசியா

பஸ் விபத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரதமர் அன்வார் 40,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்

அலோர் காஜா, ஜூன் 10 – ஞாயிற்றுக்கிழமை  அதிகாலையில்   பஹாங்  Jalan Kuantan -Segamat ட்டில்    நிழ்ந்த  பஸ் விபத்தில்  உயிரிழந்த  நால்வரின் குடும்ப உறுப்பினர்களுக்கு  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்  40,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார்.  தமது மூத்த அரசியல் செயலாளர்  டத்தோஸ்ரீ  சம்சுல்  இஸ்கந்தர்  முகமட் அக்கின் ( Shamsul Iskandar  Mohd  Akin ) மூலம்  ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10,000 ரிங்கிட் நிதி உதவியை  பிரதமர் வழங்கினார்.  

அந்த விபத்தில்  மரணம் அடைந்தவர்கள் மீது பிரதமர் மற்றும் அரசாங்கம் கொண்டுள்ள பரிவாக இந்த தொகை   வழங்கப்பட்டதாகவும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு   பிரதமர் அன்வார்  தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டதாகவும் Shamsul  Iskandar  தெரிவித்தார்.  விபத்தில் சிக்கிய  அனைவரையும்  மீட்பதற்கு உதவிய அனைத்து மீட்பு குழுவினர் மற்றும் தொண்டூழியர்களுக்கும் அன்வார் தமது  நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். 

எதிர்காலத்தில்   இதுபோன்ற   பேரிடர்களை தவிர்ப்பதற்கும் அதனை தடுப்பதற்கும்  மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைக்கான  கடப்பாட்டை அரசாங்கம்   தொடர்ந்து கொண்டிருக்கும் என்றும்   அவர் தெரிவித்தார். அந்த விபத்தில்    இரண்டு பஸ் ஓட்டுனர்கள் உட்பட   39 பேர்  சென்ற  பஸ்  கட்டுப்பாட்டை இழந்து  இரும்பு  உருளைகளை ஏற்றிச் சென்ற டிரெய்லர் லோரியில் மோதியபின்  கவிழ்ந்தது.    

Jeram தேசிய பள்ளியின்  துணை தலைமை ஆசிரியரான  48  வயதுடைய   ஹஸ்னத்துல் ஹடிலா ஹசான்  ( Hasnatul Adilah Hassan )  Jeram  தேசிய பள்ளியின் ஆசிரியான   52 வயதுடைய  டாலியா  அகமட்  (Dalia  Ahmad )  உட்பட நால்வர்  இறந்தனர்.  அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் குழுவினர் மற்றும் அவர்களது பிள்ளைகளை ஏற்றிக்கொண்டு  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக  Terengganu  சென்று கொண்டிருந்தபோது அந்த பஸ் விபத்துக்குள்ளானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!