Latestஉலகம்

பிரான்சில், சொகுசுக் கப்பலில் குடல்சார் தொற்று; 1,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

பிரான்ஸ் போர்டோ, மே-13 – பிரான்ஸின் போர்டோ (PORTO) துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த ஒரு சொகுசுக் கப்பலில் வயிற்று மற்றும் குடல்சார் தொற்று பரவியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1,700-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 50 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

இந்த பாதிப்பு நோரோ வைரஸ் (norovirus) காரணமாக ஏற்பட்டதா என்பதை கண்டறிய பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாசடர் க்ரூஸ் லைன் ( Ambassador Cruise Line) நிறுவனத்தின் கப்பலில் 1,233 பயணிகளும் 514 பணியாளர்களும் இருந்தனர்.

மேலும், 90 வயதுடைய ஒரு பயணி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சுத்திகரிப்பு பணிகள் முடிந்த பிறகு, கப்பல் ஸ்பெயினை நோக்கி தனது பயணத்தை தொடரும் என கூறப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!