Latestமலேசியா

புடு இரவு கேளிக்கை விடுதி மோதல்: வைரல் வீடியோவைத் தொடர்ந்து 5 பேர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர்-2-கோலாலம்பூர், புடுவில் உள்ள ஓர் இரவு கேளிக்கை விடுதிக்கு வெளியே நிகழ்ந்த வன்முறை மோதல் தொடர்பாக 19 முதல் 30 வயதுக்குட்பட்ட 5 ஆடவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​சமூக வலைத் தளங்களில் வைரலான 38 வினாடி வீடியோ பதிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Esperance Pudu விடுதிக்கு வெளியே சில நபர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, பின்னர் பெரிய அளவிலான மோதலாக மாறியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

​கைதுச் செய்யப்பட்ட அனைவரும் ஏற்கனவே வன்முறைச் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் வழக்குகள் தொடர்புடையவர்கள் என வங்சா மாஜு போலீஸ் கூறியது.

​சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கருப்பு நிற Perodua Myvi கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ள போலீஸார், இதில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​கொலை முயற்சி, ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!