
கோலாலம்பூர், மார்ச் 15 – இம்மாதம் மார்ச் 19, 20 -ஆம் தேதிகளில் புதிய பள்ளித் தவணை தொடங்கும்போது, முதல் வாரத்தில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது.
மாறாக,, ஆசிரியர்கள் மாணவர்கள் இடையிலான அறிமுக நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் செலுத்தப்படுமென , கல்வி அமைச்சின் தலைமை இயக்குநர் Pkharuddin Ghazali தெரிவித்தார் .
கற்றல் கற்பித்தலை தொடங்குவதற்கு முன்பாக, ஆசிரியர் – மாணவர் பெற்றோர் ஆகியோர் இடையில் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்துவதோடு அவர்களுக்கு இடையில் உறவை வலுப்படுத்திக் கொள்வதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார் .