Latestமலேசியா

பெட்டாலிங் ஜெயாவில் சினிமா பாணியில் போலீஸ் துரத்தல்; தடுப்புச் சுவரில் மோதிய கார் – ஒருவர் தப்பியோட்டம்

பாலிங், மே-9-பெட்டாலிங் ஜெயாவில் நேற்று சினிமா பாணியில் நடந்த ஓர் அதிவேக கார் துரத்தலில், இரு வெளிநாட்டினரைப் போலீஸார் கைதுச் செய்தனர்.

​அதிகாலை 2.15 மணியளவில் கூட்டரசு நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கு இடமாகச் சென்ற ஹோண்டா சிட்டி காரை மறிக்க முயன்றபோது, அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

போலீஸ் விடாமல் துரத்தியதில், SPRINT நெடுஞ்சாலையில் நிலைதடுமாறிய அந்த கார், Pavillion Damansara Heights அருகே Jalan Johor-ரிலிருந்த ஒரு பெயர் பலகையின் மீது மோதி நின்றது.

​காரில் இருந்த 20 வயது மதிக்கத்தக்க ஓர் ஆடவர் மற்றும் ஒரு பெண்ணைப் பெட்டாலிங் ஜெயா போலீஸ் கைதுச் செய்தது.

இருப்பினும், அதிலிருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

பிடிபட்ட கார் ஓர் உள்ளூர் நபருக்குச் சொந்தமானது என்றும், அது திருடப்பட்டது அல்ல என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

​தப்பியோடிய மூன்றாவது நபரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!