
பெய்ஜிங், மே-21-பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 2000-ஆம் ஆண்டு தனது முதல் சீனப் பயணத்தின்போது சந்தித்த 12 வயது சிறுவனை தற்போது சீனப் பொறியாளராக மீண்டும் சந்தித்தார்.
பெங் பெய் ( Peng Pei ) என அடையாளம் காணப்பட்ட அந்தப் பொறியாளர், ரஷ்யத் தலைவர் அண்மையில் சீனத் தலைநகருக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்றார்.
கிரெம்ளின் வெளியிட்ட காணொளியில், அந்த இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு சில வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்வது காணப்பட்டது .
பெய்ஹாய் பூங்காவில் எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்த 26 ஆண்டுகளுக்குப் பிறகு, சீனப் பொறியாளர் புதினை சந்தித்தது வரலாற்றுப்பூர்வமான நிகழ்வாக அமைந்தது.
2000 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள பெய்ஹாய் பூங்காவில் புதினுடன் பெங் பெய் புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு அவ்விருவரும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் ஏற்பாடு செய்தது.
தாம் புதினுடன் சிறுவனாக இருந்தபோது எடுத்த புகைப்படம் மறக்க முடியாத இனிமையான நினைவு என பெய் பெங் நினைவு கூர்ந்தார்.



