
ஜோர்ஜ் டவுன், மே 8 – போதைப் பொருள் கடத்தல் கும்பலை பினாங்கு போலீசார் முறியடித்ததோடு ஆறு வெளிநாட்டவர்கள் உட்பட 9 பேரை கைது செய்தனர். இம்மாதம் 2 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ Mohd Shuhaily Mohd Zain கூறினார். கடந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அந்த கடத்தல் கும்பல் செயல்பட்டு வந்ததாக நம்பப்படுவதாக அவர் தெரிவித்தார். அவர்களிடமிருந்து 274, 484 ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக Mohd Shuhaily கூறினார்.