Latestமலேசியா

போலி வெடிகுண்டு மருட்டல் ; MOTAC அமைச்சரின் வாக்குமூலம் இன்று பதிவு

கோலாலம்பூர், ஜூன் 6 – MOTAC எனப்படும் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சரின் அலுவலகத்தில், நேற்று போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அதன் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங்கிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவுச் செய்யவுள்ளனர்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, புத்ராஜெயா போலீஸ் தலைமையகத்தில் இன்று அமைச்சரிடமிருந்து வாக்குமூலம் பதிவுச் செய்யப்படும் என கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், மேலும் சில சாட்சியார்களின் வாக்குமூலங்களும் பதிவுச் செய்யப்பட்டுள்ளதாக, புத்ராஜெயா போலீஸ் தலைவர் எ அஸ்மாடி அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, அமைச்சருக்கு அனுபப்பட்ட பொட்டலம் போலி வெடிகுண்டு மருட்டல் தான் என்பதையும் அஸ்மாடி மறு உறுதிப்படுத்தியுள்ளார்.

இரு மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தை கொண்டு அது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

நேற்று காலை மணி 11.19 வாக்கில், வெடிகுண்டை போல காட்சி அளிக்கும் பொட்டலம்ஒன்றை, பொருள் விநியோக நிறுவனத்தின் ஊழியர்கள் விநியோகித்தது, CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக தெரிய வந்துள்ளது.

மாலை மணி 2.45 வாக்கில், கட்டடத்தின் 14-வது மடிக்கு கொண்டு செல்லப்பட்டு திறக்கப்பட்ட அந்த பொட்டலத்தில், வெடிகுண்டுடன் தொடர்புடைய சில பொருட்கள் அடையாளம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!