Latestமலேசியா

போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்தது ஓட்டுநர் உட்பட 8 வெளிநாட்டினர் கைது

ஜெலி, மே-28-போலீசார் துரத்திச் சென்றபோது கார் கவிழ்ந்ததில் 21 வயது மலேசிய கார் ஓட்டுநர் உட்பட 9 தனிப்பட்ட நபர்களில் மூவர் காயம் அடைந்தனர்.

இன்று விடியற்காலை மணி 7.30க்கு நிகழ்ந்த அந்த விபத்தில் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் சந்தேகத்திற்கிடமான நபர்களை ஏற்றிச் சென்ற புரோட்டான் சாகா காரை துரத்திச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக பொது தற்காப்பு படையின் தென் மண்டல பிரிவின் கமாண்டர் துணை கமிஷனர் அகமட் ரட்ஷி உசேய்ன் தெரிவித்தார்.

கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக அக்கார் ஓட்டுநர் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றபோது கம்போங் சுங்கை ருவாலில் உள்ள ஜாலான் புக்கிட் செர்மின் பகுதியில் அக்கார் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி ஒரு சரிவில் உருண்டு விழுந்தது.

மலேசிய கார் ஓட்டுநருடன் 20 முதல் 40 வயதுக்குட்பட்ட எட்டு வங்காளதேச ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அந்த வாகனத்தில் இருந்து மெத்தம்பெட்டமைன் என நம்பப்படும் 10 போதை மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ஜெலி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அவர்களில் சிலர் மேல் நடவடிக்கைக்காக ஜெலி மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குடியேறிகளை சட்டவிரோதமாகக் கடத்தியது மற்றும் போதைப்பொருள் வைத்திருத்தது தொடர்பான குற்றங்களுக்காக இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!