Latestஉலகம்மலேசியா

மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி மலேசிய – அமெரிக்க நட்புறவை பாதிக்காது

ஜோர்ஜ் டவுன், டிச 8 – மத்திய கிழக்கின் தற்போதைய நெருக்கடி மலேசியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான இருவழி மற்றும் வணிக உறவுகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தாது.

பாலஸ்தீனர்களுக்கான மலேசியாவின் நீண்டகால ஆதரவையும் அதன் மக்களின் உணர்வுகளையும் தாம் அறிந்து கொண்டிருப்பதாக கோலாலம்பூரிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பொறுப்பதிகாரியான மனு பல்லா தெரிவித்திருக்கிறார். அக்டோபர் 7ஆம் தேதி முதல் பாலஸ்தீனத்துடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. எனினும் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் அமெரிக்க மற்றும் மலேசியா ஆகியவற்றுக்கிடையிலான பொதுவான நலன்கள் பாதிக்கப்படாது என அவர் கூறினார்.

தற்போதைய நெருக்கடியின்போது பாலஸ்தீனத்தில் ஏற்பட்டுள்ள சம்பவங்கள் குறித்த நெருக்கடியான மற்றும் பயங்கரமான காட்சிகளைக் கொண்ட புகைப்படங்களும் காணொளி காட்சிகளும் மலேசியாவிலுள்ள நாம் அனைவரின் மனங்களையும் பாதித்துள்ளது என்பதை மறுக்க முடியாது. இந்த சிரமமான நேரத்தை நாம் புரிந்துகொண்டுள்ளதால் இரு தரப்பு உறவுகளை இது பாதிக்காது என மனு பல்லா சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!