
புத்ரா ஜெயா, ஜூன் 1 – மலாய்க்காரர்களை ஒன்றுபடுத்தும் கோட்பாட்டிற்காக டான்ஸ்ரீ முஹிடின் யாசினுடன் ஒத்துழைப்பதற்கு தயாராய் இருப்பதாக Tun Dr Mahathir Mohamad கூறியுள்ளார். நாங்கள் ஒத்துழைக்க விரும்புகிறோம். அற்கான நோக்கமும் ஒன்றாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். மற்ற இனங்கள் எதிர்நோக்காத அளவுக்கு மலாய்க்காரர்கள் மிகப்பெரிய பிரச்னையை எதிர்நோக்கியுள்ளனர். அந்த பிரச்னையை புரிந்துகொண்டவர்களுடன் ஒத்துழைப்பதற்கு நான் தயார் என மகாதீர் கூறினார். அன்வார் இப்ராஹிம் இதே போன்ற நோக்கத்தை கொண்டிருந்தாலும் மலாய்க்காரர்களின் நிலை குறித்து அவர் பொருட்படுத்துவதில்லை என்பதால் அவருடன் நான் ஒத்துழைக்க விரும்பவில்லை.
சமய ரீதியில்கூட அவரது கருத்தை மலாய்க்காரர்கள் ஏற்றுக்கொள்ளவிலை. எனவே அவருடன் தாம் ஒத்துழைக்க முடியாது என மகாதீர் கூறினார். மலாய்க்காரர்கள் பல்வேறு கட்சிகளாக பிரிந்து கிடந்தால் அவர்கள் அதிகாரத்தை இழந்து விடுவார்கள். அதிகாரத்தை இழந்துவிட்டால் மலாய்க்காரர்கள் இழப்பை எதிர்நோக்கும் சூழ்நிலையை சரிசெய்ய முடியாது என முன்னாள் பிரதமருமான மகாதீர் தெரிவித்தார்.