
கோலாலம்பூர், ஜூலை-22-மலேசியாவில் வேலை செய்து வந்த இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மரணமடைந்த இளைஞரின் மனைவி அவரது மரணம் குறித்து விளக்குவதை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
தேனி, ஆண்டிபட்டியை சேர்ந்த 30 வயதான தமது கணவர் விஜயபாரதி சில மாதங்களுக்கு முன் வேலைக்காக மலேசியா சென்றதாகவும் அவர் திடீரென மரணமடைந்து விட்டதாகத் தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கார்த்திகா எனும் அப்பெண் கூறியுள்ளார்.
தம்மிடம் அண்மையில் பேசிய கணவர் பல விஷயங்களைத் தெரிவித்து புலம்பியதாக அவர் குறிப்பிட்டார். ஆரோக்கியமாக இருந்த கணவர் திடீரென மரணமடைந்து விட்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.
அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும். அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என அப்பெண் கேட்டுக் கொண்டுள்ளார்.



