Latestமலேசியா

அர்ஜென்டினாவில் வயிற்று வலியால் அவதிப்பட்ட 10 வயது சிறுமி – ஆறு மாதக் கர்ப்பம்!

அர்ஜென்டினா, அக்டோபர் 28 – அர்ஜென்டினாவில் கடுமையான வயிற்று வலியால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 10 வயது சிறுமி, ஆறு மாதக் கர்ப்பமாக இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சிறுமியின் மாற்றாந்தந்தை மீது பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

சிறுமியின் கர்ப்பத்தின் வளர்ச்சி மேம்பட்ட கட்டத்தில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் சந்தேக நபரின் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். சிறுமியின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!