
கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 – மலேசியா விமானப் போக்குவரத்து குழுமம் (MAG), மலேசியா ஏர்லைன்ஸின் அனைத்து 1,260 விமானிகளுக்கும் கட்டாய போதைப்பொருள் பரிசோதனையை அமல்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஒரு விமானி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விமானப் பாதுகாப்பையும் பணிக்கான தகுதியையும் உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
MAG குழுமத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி கேப்டன் நசாருடின் ஏ. பாக்கர் (Nasaruddin A. Bakar), விமானப் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் இருக்காது என்று தெரிவித்தார்.
முதல் கட்ட பரிசோதனை ஆகஸ்ட் 15-க்குள் நிறைவடையும் என்றும், அதற்குள் பரிசோதனையில் பங்கேற்காத விமானிகள் தேவையான அனுமதி பெறும் வரை விமானங்களை இயக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறினார்.
இந்த திட்டம் பின்னர் அனைத்து பணியிலுள்ள விமானப் பணியாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்



