Latestமலேசியா

லோரி டிரைவர், பாதுகாவலரின் மகன்தான் லவனேஷ் ; எஸ்.பி.எம்-மில் 10 ஏ

ஈப்போ, ஜூன் 7 – லோரி டிரைவர் மகன்தானே, 1 ஏ, 2 ஏ எடுப்பாயா? என்ற கேள்விகளுக்கு மத்தியில் வளர்த்தவன்தான் நான் என்கிறார் ஈப்போ புந்தோங்கைச் சேர்ந்த Lavenesh Mahendran

இந்த ஏளன கேள்விகள்தான், தன்னை எஸ்.பி.எம் தேர்வில் 10 ஏ எடுக்க உத்வேகம் அளித்தாகத் தெரிவிக்கிறார் இவர்.

கடந்த மார்ச் மாதத்தில் தந்தையை இழந்த Lavenesh, பாதுகாவலராகப் பணிபுரியும் தன் தாய் சுமதியின் அரவணைப்புடன் தாமான் தாசேக் (Taman Tasek) இடைநிலைப்பள்ளியில் கல்வியைக் கற்றுள்ளார்.

மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில், மருத்துவரர் கல்வி பயிலும் தனது அக்காவின் உறுதுணை, ஆசிரியரின் வழிகாட்டுதல் மறரும் தனது சுய யுக்திகளும், தன்னை எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற வழிவகுத்ததாக வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார் இவர்.

ஒவ்வொரு மாணவரும் தங்கள் பெற்றோர் கடந்து வரும் கடின பாதைகளைச் சற்று கவனித்தாலே, கல்வி கற்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற இலக்கை உறுதி செய்வார்கள் என்கிறார் 10 ஏக்களை பெற்ற Lavenesh.

அறிவியலில் அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும் Lavenesh, எதிர்காலத்தில் பெட்ரோலிய பொறியியலாளராக வேண்டும் எனும் அவரின் லட்சியத்தை எட்டி பிடிக்க வணக்கம் மலேசியாவின் மனமார்ந்த வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!