Latestமலேசியா

வீட்டுக் காவலுக்கான சட்டப்பூர்பூர்வ வழக்கு மனுவை நஜீப் தாக்கல் செய்தார்

கோலாலம்பூர், ஏப் 3 – தம்மை வீட்டுக் காவலில் தண்டனை அனுபவிக்க அனுமதித்த முன்னாள் பேரரசரின் துணை உத்தரவை அமல்படுத்துவதற்கு அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறு சட்டப்பூர்வ வழக்கு மனுவை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நஜிப்பின் SRC இன்டர்நேஷனல் Sdn Bhd வழக்கில் 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டாக அவரது சிறைத்தண்டனையை குறைக்கப்பட்டதோடு 210 மில்லியன் ரிங்கிட் அபராத தொகை 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் பிப்ரவரி 2 ஆம்தேதி குறைந்ததது.

70 வயதான நஜிப் தற்போது காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அவர் 2028ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம்தேதியன்று விடுதலை செய்யப்படுவார். ஏப்ரல் 1ம் தேதி தாக்கல் செய்த விண்ணப்பத்தில், அப்போதைய பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah , தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 29 அன்று நடந்த மன்னிப்பு வாரியக் கூட்டத்தின் போது வீட்டுக் காவலில் வைப்பதற்கு அனுமதிக்கும் துணை உத்தரவை” பிறப்பித்தார் எனறு நஜீப் தெரிவித்தார். ஏப்ரல் 1ஆம தேதி தாக்கல் செய்த தமது வழக்கு மனுவில் நஜீப் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், அந்த கூடுதல் துணை உத்தரவு பிப்ரவரி 2 ஆம்தேதியன்று மன்னிப்பு வாரியத்தால் அறிவிக்கப்படவில்லை என்று நஜிப் குற்றம் சாட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!