Latestமலேசியா

வெயில் காலங்களில் அதிகமாக நீர் அருந்தும்படி மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வலியுறுத்து

குவா மூசாங், ஏப் 23 – வெப்பமான சிதோஷ்ண நிலை காரணமாக நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதோடு , பொருத்தமான பள்ளி சீருடைகளை அணிய வேண்டும் என கல்வி அமைச்சு ஆலோசனை தெரிவித்துள்ளது. பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்குமாறு கல்வி அமைச்சர் Fadhlina Sidek வலியுறுத்தினார். வெயில் காலத்தின்போது மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே வழிகாட்டுதல்கள் இருப்பதாகவும், அது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் குறித்து நாங்கள் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளும் தற்போதைய SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறையை பின்பற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளோம் என Fadhina தெரிவித்தார். ஒவ்வொரு பள்ளியும் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளின் விளைவுகள் மீதான மதிப்பீட்டை நடத்தியிருக்கும் என தாம் நம்புவதாக கிளந்தான் Gua Musang கில் Sri Permai பள்ளிக்கு வருகை புரிந்தபோது அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை துணையமைச்சர் Wong Kah Woh மற்றும் Kelantan கல்வித்துறை இயக்குநர் டத்தோ Mohd Zamri Abdul Aziz ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!