Latestமலேசியா

அதிநவீன தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்வதில் ஊடகத் துறையினர் நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் – சரவாக் பிரீமியர்

கூச்சிங், மே-27, டிஜிட்டல் கருவிகளும் தொழில்நுட்பமும் பொறுப்புடன் பயன்படுத்தப்படுவதை உறுதிச் செய்யும் நெறிமுறைகளை ஊடகத் துறையினர் உருவாக்க வேண்டும் என சரவாக் பிரீமியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் சவால்களைச் சமாளிப்பதற்கு அது அவசியம் என Tan Sri Abang Johari Openg கூறினார்.

தகவல்களை நிர்வகிப்பதற்கும் பரப்புவதற்கும் சரியான நடைமுறைகள் வேண்டும்.

தவறான தகவலை உருவாக்கவும் பரப்பவும் அதிநவீன தொழில்நுட்பமான AI தவறாகப் பயன்படுத்தப்படலாம்.

அப்படி பரப்பப்படும் தகவல் உண்மையானதா என்பதை மதிப்பிடுவது கடினம் என்பதால் AI பயன்பாடு அணுக்கமாகக் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

ஞாயிற்றுக்கிழமை கூச்சிங்கில் சரவாக் ஊடக மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய Tan Sri Abang Johari அவ்வாறு கூறினார்.

கூச்சிங்கில் ஆயிரக்கணக்கான உள்ளூர் வெளியூர் ஊடகவியலாளர்கள் பங்கேற்கும் தேசியப் பத்திரிகையாளர்கள் தினம் Hawana களைக் கட்டியிருக்கிறது.

அந்த 3 நாள் மாநாட்டின் முதல் இரு நாட்களில் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் பல ஆய்வரங்குகளைத் திறந்து வைத்தார்.

இன்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரில் பங்கேற்று மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகிறார்.

இந்த Hawana நிகழ்வின் திட்ட இயக்குநர் பெர்னாமா தலைமை செய்தியாசிரியர் அருள் ராஜூ என்பதும் குறிப்பிடத்தத்கதது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!