Latestமலேசியா

அதிர்ச்சியூட்டும் மோட்டார் சைக்கிள் வழிப்பறி ; பெண் சாலையில் விழுந்து, புரண்டு காயமடையும் டாஷ்கேம் காணொளி வைரல்

கோலாலம்பூர், ஏப்ரல் 19 – மோட்டார் சைக்கிளில் செல்லும் பெண் ஒருவர், மற்றொரு ஓட்டுனரால் வழிப்பறிக்கு இலக்காகி, வாகன நெரிசல் மிகுந்த ரோட்டில் விழுந்து விபத்துக்குள்ளாகும் டாஷ்கேம் பதிவால் நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த 16 வினாடி வீடியோவில், மோட்டார் சைக்கிளில், இடது சாலையில் பயணிக்கும் பெண் ஒருவரை, நெருங்கி செல்லும் ஆடவன் ஒருவன், அவரது கை பையை பிடித்து இழுப்பதை காண முடிகிறது.

அதனால், அப்பெண்ணின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, அவர் நடுரோட்டில் விழுந்து உருள்கிறார்.

“திருடன் மிகவும் தந்திரமானவன். அவன் தனது மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை பிளாஸ்டிக்கை கொண்டு மறைத்த பின்னர், எனது சகோதரியிடம் கொள்ளையிட்டுள்ளான்” என அந்த காணொளியின் கீழ் பதிவிடப்பட்டுள்ளது.

கொள்ளையிடப்பட்ட பையில், பணப்பை, அடையாள அட்டை, வங்கி பற்று சீட்டு அட்டைகள், ரொக்கப் பணம் உட்பட ஐ-போன் ஒன்றும் இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த வழிப்பறி சம்பவம், கிள்ளான், பெர்சியரான் ராஜா மூடா மூசாவிலுள்ள, ராஜா ஜாரினா இடைநிலைப் பள்ளிக்கு அருகில் நிகழ்ந்தது என நம்பப்படுகிறது. அதனால், சம்பந்தப்பட்ட பெண் கைகளிலும், கால்களிலும் கடுமையான காயங்களுக்கு இலாக்கானதாகவும் கூறப்படுகிறது.

அச்சம்பவம் தொடர்பில், இதுவரை போலீஸ் அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

இந்நிலையில், இதுபோன்ற சம்பவத்தால் ஓர் அப்பாவி உயிரிழக்ககூடும் என்பதால், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் “ஸ்லிங்” பைகளை எடுத்துச் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு இணையவாசிகள் பலர் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, “தொலைவில் இருந்தும் திருடன் உங்கள் பையை குறிவைக்க முடியும். ஆதனால், நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பது வெளிப்படையாக தெரியாமல் இருக்க, மோட்டார் சைக்கிளோட்டிகள், கூடுதலாக “ஜாக்கெட்” அல்லது மேல் அங்கியை அணியுங்கள் எனவும் அவர்களில் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!