Latestமலேசியா

அமிர் ஹம்சா, சுல்கிப்ளி, ஜொஹாரி, கோபிந்த் சிங் அமைச்சர்களாக நியமனம்; துணையமைச்சர்களாக சரஸ்வதி, குலசேகரன், ரமணன் இடம் பெற்றனர் – சிவக்குமார் இடம்பெறவில்லை

கோலாலம்பூர், டிச 12 – கோலாலம்பூர், டிச 12 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் இ.பி.எப் (EPF)பின் தலைமை நிர்வாக அதிகாரியான அமீர் ஹம்சா அஸிசான் இரண்டாவது நிதியமைச்சராக நியமிப்பட்டார். அமைச்சரவை பட்டியலில் மனித வள அமைச்சராக இருந்த வி. சிவக்குமார் இம்முறை இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக புதிய மனித வள அமைச்சராக DAP யின் ஸ்டீவன் சிம் நியமிக்கப்பட்டார். அதே வேளையில் சுல்கிப்லி அகமட் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தித்திவங்சா நாடாளுமன்ற உறுப்பினரான ஜோஹாரி அப்துல் கனி தோட்ட தொழில்துறை மற்றும் மூலப் பொருள் அமைச்சராவும் , டமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் இலக்கவியல் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினரான எம். குலசேகரன் பிரதமர் துறையில் சட்டம் மற்றும் அமைப்புகளுக்கான சீரமைப்பு துறையின் புதிய துணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழில்முனைவர், மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறையின் புதிய துணையமைச்சராக டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் மற்றும் ஒற்றுமைத் துறை துணையமைச்சராக செனட்டர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமராகவும் நிதியமைச்சராகவும் அன்வார் தொடர்ந்து இருந்து வருகிறார். இதற்கு முன் துணைக் கல்வி அமைச்சராக இருந்த லிம் ஹுய் யிங் துணை நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்நாடு வர்த்தக மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சர் பதவிக்கு டத்தோ அர்மிசான் முகமட் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!