
ஈப்போ, ஏப் 9- இன்று அதிகாலை, கோப்பெங்கிற்கு அருகில், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 302.4 ஆவது கிலோமீட்டரில் நான்கு சக்கர வாகனம் இரண்டு கொள்கலன் லாரிகளுடன் மோதிய விபத்தில் அந்த வாகனத்தின் ஓட்டுநர் கடுமையான காயத்திற்கு உள்ளானார்.
அதிகாலை மணி 4.06 க்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, கோப்பெங் மற்றும் தாப்பா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
அங்கு ஒரு Ford Ranger வாகனம் , தனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த கொள்கலன் கண்டெய்னர் லாரியின் மீது முதலில் மோதியிருந்த ஒரு மற்றொரு கொள்கலன் லாரியின் பின்புறத்தில் மோதியிருந்தது கண்டறியப்பட்டது.
அந்த விபத்தின் விளைவாக சுமார் 46 வயதுடைய ஆடவர் வாகனத்தில் சிக்கி பலத்த காயத்திற்கு உள்ளானாகிய வேளையில் கொள்கலன் லோரியில் பயணித்த மற்ற இருவர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினர்.
தீயணைப்புத் துறையினர் சிறப்பு கருவிகளை பயன்படுத்தி வாகனத்தில் சிக்கியவரை மீட்டனர்.
காயம் அடைந்த மூவரும் மூவரும் சிகிச்சைக்காக அவசர மருத்துவ மீட்பு சேவை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.



