Latestமலேசியா

அரசாங்க வாய்ப்புகளைத் தவற விடாதீர்; இந்தியக் கூட்டுறவுக் கழங்களுக்கு டத்தோ ரமணன் அறைகூவல்

கோலாலம்பூர், ஜூன்-24, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவுக் கழகங்களின் மேம்பாட்டுக்காக மடானி அரசாங்கம் பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

அவற்றை நாட்டிலுள்ள இந்தியக் கூட்டுறவுக் கழகங்களும் சரியாகப் பயன்படுத்தி பயனடைய வேண்டும் என தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

சிறு தொழில் முதல் பெரு தொழில் வரையிலான முன்னேற்றத்திற்கு உதவ TEKUN, SME Corp, Bank Rakyat, Amanah Ikhtiar Malaysia (AIM) உள்ளிட்ட அமைச்சின் கீழ் உள்ள 10 நிறுவனங்கள் வாயிலாக பல்வேறு திட்டங்கள் உள்ளன.

தொழில் கடனுதவி முதல் பயிற்சித் திட்டங்கள் வரை வழங்கப்படுவதை இந்தியக் கூட்டுறவுக் கழகங்கள் தவற விட்டு விடக் கூடாது என்றார் அவர்.

துணையமைச்சர் முன்னதாக கோலாலம்பூரில் நடைபெற்ற KKP எனப்படும் மலேசியத் தொழிலாளர் கூட்டுறவு நாணயச் சங்கத்தின் 44-வது பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

B40 மக்களின் வாழ்வாதார உயர்வுக்காகத் தொடங்கப்பட்ட KKP கூட்டுறவுக் கழகம் இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

நிறுவப்பட்டு 43 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள KKP தற்போது 47,000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது; நாடு முழுவதும் 230 கிளைகளையும் வைத்துள்ளது.

அதன் மொத்த சொத்து மதிப்பும் 10 கோடி ரிங்கிட்டை எட்டியிருப்பது குறித்து டத்தோ ரமணன் மகிழ்ச்சித் தெரிவித்தார்.

உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு உதவி அதன் மூலம் ஒட்டுமொத்த சமுதாய மேம்பாட்டுக்கும் KKP தொடர்ந்து உதவி வர வேண்டும் என டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!