
கோலாலம்பூர், நவம்பர்-27,2026-ஆம் ஆண்டுக்கான ஆசிய வல்லமை குறியீட்டின் அரசியல் தலைமைத்துவ மதிப்பீட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னணி 10 தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவைத் தளமாகக் கொண்ட Lowy ஆய்வு நிறுவனம் அந்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக அரங்கில் அரசியல் தலைவர்கள் தங்களது நாடுகளின் அரசதந்திர நலன்களை எந்த அளவுக்குத் திறம்பட முன்னெடுத்துச் செல்கின்றனர் என்பதன் அடிப்படையில் அந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவ்வகையில், 46 புள்ளிகளுடன் அன்வார் உலகளவில் பத்தாவது இடத்திற்குத் தேர்வாகியுள்ளார்.
அதே சமயம், ஆசியான் வட்டாரத்தைப் பார்க்கும் போது முதல் 10 பேரில் இடம் பெற்றுள்ள 3 ஆசியான் தலைவர்களில் அன்வாரும் அடங்குவார்.
மூன்றாவது இடத்திலிருக்கும் சிங்கப்பூர் பிரதமர் லோரன்ஸ் வோங்கும் எட்டாவது இடத்திலிருக்கும் வியட்நாம் அதிபர் தோ லாமும் இதர இருவராவர்.
அப்பட்டியலில் சீன அதிபர் ஸீ சின் பிங் முதலிடத்திலும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இண்டாமிடத்திலும் ஜப்பானியப் பிரதமர் சனாயே தகாய்ச்சி நான்காவது இடத்திலும், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
பொருளாதார வலிமை, தற்காப்புத் திறன், அரசதந்திர உறவுகள் மற்றும் கலாசாரச் செல்வாக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



