Latestமலேசியா

LRT இயில் பாதிப்பு: மோட்டார் சைக்கிளில் சென்று SPM மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்

கோலாலம்பூர், நவம்பர்-27,கோலாலம்பூரில் நேற்று காலை ஏற்பட்ட LRT இரயில் சேவை பாதிப்பால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி, 2 மாணவர்கள் தங்களின் SPM கணிதத் தேர்வைத் தவறவிடும் சூழல் ஏற்பட்டது.

ஆனால், ஒரு ஆசிரியரின் துரித நடவடிக்கையால் அந்த மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர்.

காலை நேர ரயில் தாமதத்தால், Jelatek மற்றும் Kampung Baru ஆகிய நிலையங்களில் இரண்டு படிவம் 5 மாணவர்கள் சிக்கித் தவித்தனர்.

இதையறிந்த St John’s பள்ளியின் படிவம் 5 ஒருங்கிணைப்பாளர் Mohd Nur Hafizan Abdullah, உடனடியாகத் தனது மோட்டார் சைக்கிளில் சென்று இருவரையும் அழைத்து வந்து, சரியான நேரத்தில் தேர்வு மையத்தில் சேர்த்தார்.

ஆசிரியரின் இந்தச் செயலைப் பள்ளி நிர்வாகம் ஃபேஸ்புக்கில் பாராட்டியுள்ளது.

சமூக வலைத்தளங்களிலும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

LRT தாமதத்தால் பயணிகள் அதிருப்தி அடைந்திருந்த நிலையில், முக்கியமான SPM தேர்வு காலத்தில் பள்ளிகளின் இத்தகைய முன்னேற்பாடுகளைப் பலரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

எதிர்பாராத சவால்கள் வரும்போது, மாணவர்களின் எதிர்காலத்திற்காக ஆசிரியர்கள் எந்த எல்லைக்கும் சென்று உதவுவார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!