Latestமலேசியா

நியூ யோர்க் போலீஸார் போல் நடித்து மோசடி; கோலாலம்பூரில் 11 பேர் கைது

கோலாலம்பூர், நவம்பர்-27,அமெரிக்காவின் நியூ யோர்க் போலீஸ் அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து, இணைய மோசடியில் ஈடுபட்டு வந்த அனைத்துலக கும்பலை மலேசியப் போலீஸார் முறியடித்துள்ளனர்.

கோலாலம்பூர், புக்கிட் சிலோனிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 11 வெளிநாட்டவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.

அவர்கள் அமெரிக்க மக்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார்.

குற்றச் செயல்களிலும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திலும் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி, பாதிக்கப்பட்டவர்களை அக்கும்பல் ஏமாற்றி வந்துள்ளது.

அதற்காக AI தொழில்நுட்பம், போலி போலீஸ் சீருடைகள் மற்றும் ஆவணங்களையும் அக்கும்பல் பயன்படுத்தியுள்ளது.

இவ்வாண்டின் மத்தியிலிருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் அக்கும்பல், சம்பந்தப்பட்ட குடியிருப்பை மாதம் 15,000 ரிங்கிட் வாடகைக்கு எடுத்திருந்தது.

சோதனையின் போது 31 கைப்பேசிகள், 7 மடிக்கணினிகள் மற்றும் 3 போலி போலீஸ் சீருடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதுச் செய்யப்பட்ட அனைவரும் நாளை வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!