Latestமலேசியா

ஆண்டுதோறும் 300 மில்லியன் சிறார்கள் பாலியல் சித்தவதைக்கு உள்ளாகின்றனர்

கோலாலம்பூர், மே 27 – ஆண்டுதோறும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறார்கள் இணையம் வாயிலாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என Edinburg பல்கலைக்கழகத்தின் ஆய்வை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் உலகில் 12.6 விழுக்காட்டு சிறார்கள் அவர்களது அனுமதியின்றி பேசாமலேயே ஆபாச மற்றும் பாலியல் காணொளிகளின் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 302 மில்லியன் சிறார்கள் இத்தகைய பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் முழுவதிலும் உள்ள 300 மில்லியன் சிறார்களில் 12 .5 விழுக்காட்டினர் இணைய வாயிலான தொடர்பினால் அல்லது அவர்களது அனுமதியின்றி பெரியோர்களாலும் மற்றும் இதர பதின்ம வயதினராலும் பாலியல் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக பணத்திற்காக மிரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. உலகளாவிய நிலையில் இத்தகைய சம்பவங்கள் நடந்த போதிலும் முதல் இடத்தில் உள்ள நாடாக அமெரிக்கா கருதப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவில் 9 ஆண்களில் ஒருவர் அதாவது 14 மில்லியன் பேரில் பெரும்பாலோர் சிறார்களுக்கு எதிராக சமூக வலைத் தளங்கள் மூலமாக இக்குற்றங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டிருப்பதாவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!