Latestஉலகம்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்; மாலை 3 மணிவரை 51.41 விழுக்காடு வாக்குகள் பதிவு

புதுடில்லி, ஏப் 19 – இந்திய நாடாளுமன்ற தேர்தலில்  ஏழு கட்டமாக நடைபெறும் வாக்களிப்பின் முதல் கட்ட வாக்களிப்பு இன்று  தமிழகம் உட்பட  21 மாநிலங்களிலும், Union பிரதேசத்திலும் நடைபெற்றது.   பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான  தேசிய   ஜனநாயக கூட்டணி மற்றும்   பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான  இந்திய தேசிய மேம்பாட்டு அணிக்குமிடையே  கடும் பலப்பரிட்சையாக இந்த  தேர்தல்  அமைந்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்திற்கான 543 தொகுதிகளில்  மக்கள்  வாக்களித்து தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வுள்ளனர். ஏழு கட்டங்களான வாக்களிப்பு முழுமையாக முடிந்த பின்   ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 

இதனிடையே   39 நாடாளுமன்ற  தொகுதிகளைக்  கொண்ட தமிழ் நாட்டிலும் ஒரு நாடாளுமன்ற தொகுதியைக்  கொண்ட புதுச்சேரியிலும்   இன்று காலை  7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.   தமிழ்நாட்டில் இன்று மாலை 3 மணிவரை சராசரி  51.41 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக இதுவரை தகவல்கள் வெளியாகியுள்ளன.   

இதனிடைய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  சென்னை SIT கல்லூரியில் உள்ள வாக்குச் சாவடியில்  தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.  தமிழகத்தின்  பாரதீய ஜனதா கட்சி தலைவரான   அண்ணாமலை,  கருர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட   ஊத்துப்பட்டி வாக்குச் சாவடியில் வாக்களித்த நிலையில் அதிமுக   பொதுச் செயலாளர்  எடப்பாடி  பழனிசாமி சேலம் சிலுவம்பாளையத்தில்  தனது வாக்கை செலுத்தினார்.  

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிடும் தமிழிசை  சவுந்தரராஜன்,  சென்னை சாலிக்கிராமத்தில் வாக்களித்தார்.  தருமபுரியில்   பாமக வேட்பாளர்  சௌம்யா அன்புமணியும் , பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸூம்  வாக்களித்தனர். 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!