Latestமலேசியா

இம்முறை சீனப் புத்தாண்டு காலத்தில் மீன் விலைககள் அதிக உயர்வாக இருந்தன

கோலாலம்பூர், பிப் 26 – கடந்த காலத்தைவிட இம்முறை சீனப் புத்தாண்டு காலத்தில் மீன் விலைகள் அதிக உயர்வாக இருந்ததோடு இன்றுவரை விலை இன்னும் குறையாமல் இருப்பதாக கூறப்படுகிறது. சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக மீன்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சீன மீனவர்களில் பெரும்பாலோர் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சில நாட்களுக்கு முன்னதாக விடுமுறை எடுத்துக்கொண்ட மீனவர்கள் Chap Goh Meng வை இரண்டு வாரத்திற்கும் கூடுதலாக விடுமுறையில் இருப்பதுவும் மீன்கள் விநியோகத்தில் பற்றாக்குறைக்கு மற்றொரு காரணம் என மீன் வியாபாரியான Raja Aspalela Raja Adzman தெரிவித்திருக்கிறார்.

இந்த ஆண்டு சீனப் பெருநாள் கொண்டாட்டத்தின்போது பெரிய இறால்கள் மற்றும் வெள்ளை நிற வௌவால் மீன்கள் விலை அதிகமாக இருந்ததாக அவர் கூறினார், முன்பு ஒரு கிலோவைக் கொண்ட மூன்று வௌவால் மீன்கள் 60 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது. சீனப் புத்தாண்டு காலத்திலிருந்து இப்போதுவரை 500 கிரேம் அல்லது அதற்கும் குறைந்த எடையுள்ள வௌவால் மீன்கள் இப்போது 100 ரிங்கிட்வரை விற்கப்படுகிறது. . இதற்கு முன் ஒரு கிலோ 75 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்ட பெரிய இறால்கள் தற்போது ஒரு கிலோ 120 ரிங்கிட்டாக உயந்துள்ளதாக சிலாங்கூர் மீனவர் சங்கத்தின் தலைவர் Omar Abdul Rahman கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!