
கெலந்தான், தும்பாட், ஏப் 22- Wakaf Baruவில், Kampung Belukar ரில் அமைந்துள்ள, லோரிகளின் சரக்குப் பகுதிக்கான உள்ளடக்கத்தை தயாரிக்கும் பட்டறையின் வளாகத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டதில், அதன் உரிமையாளருக்கு 40,000-ரிங்கிட்டிற்கு மேலாக இழப்பு ஏற்பட்டது.
அதிகாலை மணி 3.30 அளவில் தனது சகோதரரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தபோது , இந்த தீவிபத்து குறித்து தகவல் கிடைக்கப்பெற்றவுடன் அதிர்ச்சிக்கு உள்ளானதாக அந்த பட்டறையின் உரிமையாளரான 50 வயதுடைய Azliam Aziz தெரிவித்தார்.
லோரிகளுக்கான சரக்கு பகுதிகளை தயாரிப்பதற்கான பலகைக் குவியல் உட்பட ஐந்து பதப்படுத்தும் இயந்திரங்கள் தீயில் சேதமடைந்ததாக அவர் இன்று தெரிவித்தார்.
17 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த வளாகத்தில் இது இரண்டாவது தீ விபத்தாகும். இதற்கு முன் 2015ஆம் ஆண்டில் முதல் முறையாக தனது பட்டறையில் தீவிபத்து ஏற்பட்டதாக Azliam கூறினார்.
அனைத்துப் பணிகளும் முடிவடையும் வரை பட்டறை வளாகம் ஒரு வாரத்திற்கு மூடப்படலாம் என்றும், வாடிக்கையாளர்களின் ஆர்டர்களும் ஒத்திவைக்கப்பட வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த பட்டறையைச் சுற்றி குடியிருப்பு வீடுகளைச் சேர்ந்த மக்களும் , உணவகங்களும் உள்ளன, தீயணைப்புப் படையினரின் துரித நடவடிக்கையினால் அனைவரும் உயிர் தப்பியதால் இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.



