
ஆந்திர பிரதேசம், மே-11-உடல் பருமனாக இருந்த காரணத்தால் மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரண் குமார் எனும் அவ்வாடவன், 31 வயதுடைய தனது மனைவி பத்மஜாவை விஷம் வைத்தும் அதற்கு பின் உறங்கும் பொழுது முகத்தில் தலையணை வைத்து அழுத்தியும் கொலை செய்துள்ளான் என கூறப்படுகிறது.
இவ்வழக்கில் கடந்த செவ்வாய் அன்று அவ்வாடவன் கைது செய்யப்பட்டான்.
தன் கணவனின் பேச்சை கேட்காமல் அளவுக்கு மீறி உணவை உண்ணும் பழக்கம் கொண்டிருந்ததால் அப்பெண் உடல் பருமனாகியுள்ளார்.
இதைத்தவிர அவர் எப்பொழுதும் உறங்கும் ஆடை அணிந்து கொண்டு வெளியே சென்றிருக்கிறார்.
அவரின் இத்தகைய நடவடிக்கைகள் பிடிக்காமல் கிரண் குமார் பத்மஜாவை கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், மற்றொரு தகவல் அவ்வாடவனுக்கு வேலை செய்யும் இடத்தில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இவைதான் இந்த கொலைக்கான காரணம் எனவும் நம்பப்படுகிறது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



