
கோலாலம்பூர், மே 21 – இம்மாத தொடக்கத்தில் துப்பாக்கிகள், 77தோட்டாக்கள், ஒரு போலி கைத்துப்பாக்கி மற்றும் 2 கூர்மையான கத்திகள் ஆகியவற்றை வைத்திருந்தது தொடர்பான நான்கு குற்றச்சாட்டுகளை ரேலா உதவி அதிகாரி ஒருவர் செஷன்ஸ் நீதிமன்ற்த்தில் ஒப்புக் கொண்டார்.
நீதிபதி முகமட் சுல் ஷாகிகுடின் சுல்கிப்ளி முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுக்களை முகமட் பைசால் பவ்சி ஒப்புக்கொண்டார்.
மே 10 ஆம்தேதியன்று மாலை மணி சுமார் 6.00 அளவில் உலு திரெங்கானுவில் ஜாலான் கம்போங் டோக் லாவிட் சாலையில் ஒரு வாகனத்தில் இந்த ஆயுதங்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக அந்த நபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த ஆடவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு குற்றச்சாட்டுக்களை மீண்டும் செவிமடுப்பதற்கான மறுவாசிப்புக்கு ஜூன் 7 ஆம்தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.



