Latestமலேசியா

காசா உதவி குழுவினருக்கு நேர்ந்த கொடுமை: வீடியோ வெளியிட்ட இஸ்ரேல் அமைச்சருக்கு உலக நாடுகள் கடும் கண்டனம்

காசா, மே 21- காசாவுக்கு உதவ சென்ற உதவியாளர்களின் கைகளை கட்டி அவர்களை முழங்காலில் அமர செய்த வீடியோவை இஸ்ரேல் அமைச்சர் வெளியிட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் விமர்சனத்தை கிளப்பியது. இஸ்ரேல் பிரதமர் உட்பட பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம், கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளன.

கப்பலில் இருந்த சில செயற்பாட்டு உதவி குழுவினர்கள் ஆஷ்டோட் (ASHDOD) துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் காசாவில் நிலவும் மனிதாபிமான பிரச்சினையை மீண்டும் உலக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!